இந்த வார 13ம் தேதி வெளியாகும் காளிதாஸ்-சாம்பியன்-கேப்மாரி உள்ளிட்ட 10 படங்கள்.

இந்த வருடம்  2019 இறுதி டிசம்பர் மாதத்தில் இருக்கிறோம். எனவே இந்தாண்டு முடிந்தவரை தங்கள் படத்தை வெளியிட வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் முனைப்பில் உள்ளனர்.

கடந்த வாரம் 6ம் தேதி அட்டகத்தி தினேஷ் நடிப்பில்
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, கதிர் நடிப்பில் ஜடா, இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் இருட்டு, ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட ரம் 4 படங்கள் வெளியாகின.

இந்த வாரம் அதனை மிஞ்சி 10 படங்கள் ரிலீசாகவுள்ளது.

இவற்றில் ஓரிரு படத்தில் மட்டுமே தெரிந்த முகங்கள் உள்ளனர்.

ஜெய் நடித்துள்ள ‘கேப்மாரி’ படத்தை நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கிறார்.

‘சாம்பியன்’ படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார்.

பரத் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் ‘காளிதாஸ்’.

இவை தவிர ”50 ரூவா, அய்யா உள்ளேன் அய்யா, கைலா, கருத்துக்களைப் பதிவு செய், மங்குனி பாண்டியர்கள், தேடு, திருப்பதிசாமி குடும்பம்” ஆகிய படங்களும் ரிலீசாகவுள்ளன.

இத்தனை படங்களில் எந்தெந்த படத்திற்கு எவ்வளவு  தியேட்டர்களில் கிடைக்கும் என்பது தெரியவில்லை?