இனி மேல் எனக்கு விடிவு காலம் தான் – வைகை புயல் வடிவேலு நம்பிக்கை.!*

உலக நாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் கார்த்தி, வைகை புயல் வடிவேலு உள்பட கோலிவுட் திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் வைகை புயல் வைகைப்புயல் வடிவேலு பேசுகையில், கமல்ஹாசனின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் தான் நடிப்பது உறுதி என்றும். இனி தனக்கு விடிவு காலம் தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் ‘இந்தியன் 2′ படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாகவும். ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.