இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி!

இன்ஸ்டாகிராம் உத்தரவு அம்சம் (directive) மேம்படுத்தப்பட்டு தற்சமயம் வாக்கி டாக்கி போன்று குரல் செய்திகள் (Voice messages) அனுப்பும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் உத்தரவு அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோபோன் பட்டனை அழுத்திப்பிடித்துக் கொண்டு பேச வேண்டும், பேசி முடித்த பிறகு மைக்ரோபோன் பட்டனை விடுவித்தால் குரல் செய்திகள் அனுப்பப்பட்டு விடும்.

பேஸ்புக்கின் மெசேஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இருப்பதை போன்று இந்த அம்சம் காணன்னடுகின்றது.

இன்ஸ்டாகிராம் செலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல் செய்திகள் வசதி ஏற்கனவே ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையை நினைவூபடுத்துகின்றது.

இன்ஸ்டாகிராம் இந்த சேவையை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த அம்சம் கொண்டு புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் அல்லது Text மட்டுமின்றி குரல் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

வழக்கமான குரல் செய்திகள் வசதியை போன்று இல்லாமல், வித்தியாசமான வசதியை உள்வாங்குகின்றது.

இன்ஸ்டாகிராம் செயலியின் உத்தரவு பகுதிக்கு சென்று நீங்கள் மெசேஜ் செய்ய வேண்டிய இன்ஸ்டா நண்பரை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஒருவரையோ அல்லது பலரை தேர்வு செய்யமுடியும்.

மெசேஜ் பாரில் கேமரா ரோல் பட்டனிற்கு அடுத்து காணப்படும் மைக்ரோபோன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

மைக்ரோபோன் ஐகானை அழுத்திப்பிடித்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டியதை பதிவு செய்ய வேண்டும், பேசி முடித்ததும் மைக்ரோபோன் ஐகானை விடுவிக்க வேண்டும்.

பதிவு செய்த குரல் செய்திகளை நிராகரிக்க மெசேஜை திரையின் இடதுபுறமாக ஸ்வைப் செய்ய வேண்டும்.
“குரல் செய்திகள் பதிவு செய்ய புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஒரு நிமிடம் மட்டும் (one minute only) தெரிவைபயன்படுத்தலாம்”.

இவ்வாறு செய்யும் போது நீங்கள் அனுப்பும் குறுந்தகவல் நிரந்தரமாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு நிமிடத்திற்கு மட்டும் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யமுடியும்.

ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையில் அனுப்பப்படும் குரல் செய்திகள் இரண்டு நிமிடங்களில் தானாக அழிந்து விடும். இவ்வாறு அழியாமல் இருக்க பயனர்கள் மெசேஜை அனுப்பும் முன் ‘keep’ எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் வாட்ச் ஓ.எஸ். 5 இயங்குதளத்தில் வாக்கி டாக்கி எனும் அம்சத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது.

இன்ஸ்டாகிராமின் குரல் செய்திகள் அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்து, இந்த புதிய வநதியை அனுபவிக்க முடியும்.