இப்படி இருந்தா ரஜினிகாந்த் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்..? – டி.ராஜேந்தர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் படம் கடந்த ஜனவரி 9ல் ரிலீசானது.

கிட்டதட்ட ஒரு மாதம் ஆன நிலையில் நிறைய தியேட்டர்களிலும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்த லாபத்தை படம் தரவில்லை. நஷ்டத்தை நஷ்டம் ஏற்படுத்திவிட்டதாக சில விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழ் திரையுலகமே சில நாட்களாக பரபரப்பாகியுள்ளது.

இதனையடுத்து விநியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்திடம் முறையிட அவர்கள் ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸிடம் முறையிட சொன்னதாக தெரிகிறது.

இதனால் சிலர் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்கச் சென்றனர். ஆனால் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த விநியோகஸ்தர்கள் மீது குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் மிகவும் சர்ச்சையானது.

இந்த நிலையில் தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்.

அப்போது… “தர்பார் திரைப்படத்தால் தமிழகம் முழுவதும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லைகா விநியோகஸ்தர்களுக்கு சரியான பதிலைச் சொல்லவில்லை.

குறைந்தபட்ச உத்திரவாதத்தில் வாங்கியிலிருந்தால் சங்கங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிடலாம்.

ஆனால் விளக்கில் விட்டில் பூச்சி விழுவதை போல் விழுந்துவிட்டார்கள்,

தர்பார் படம் ஒரிஜினர் படம் போல இல்லை. டப்பிங் படம் போலாகிவிட்டது

தங்களது கோரிக்கையை முருகதாஸிடம் கூறச் சென்ற விநியோகஸ்தர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

முருகதாஸிடம் மூத்த இயக்குநர் என்ற முறையில் கேட்கிறேன். உங்களுக்கான சங்கம் உள்ளது அப்படியிருக்கையில் காவல்துறையில் புகார் அளிக்கலாமா?

படத்தை நீங்கள் எடுத்தால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது யார்? விநியோகஸ்தர்கள் தான்.

இதற்கு முன் நீங்கள் இவ்வளவு சம்பளமா வாங்கினீர்கள்? உங்களை சந்திக்க மூகமுடி அணிந்து கூட்டமாக வந்தார்களா?

துப்பாக்கியோடு வந்தார்களா? கத்தியோடு வந்தார்களா? அவர்கள் மீது புகார் அளித்ததை மூத்த இயக்குநர் என்ற முறையில் மிகுந்த வருத்தமடைகிறேன்.

அவர்கள் கைது செய்யப்பட்டால் எங்கள் சங்க சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களையும் எங்களுக்கு ஆதரவான தயாரிப்பாளர்களை திரட்டி நாங்கள் குரல் கொடுப்போம்.

ஒரு வேளை தர்பார் படத்தை வாங்கிய குற்றத்திற்காக அவர்களுக்கான பரிசு கைது தான் என்றால் ‘வாங்கியது தர்பார் எண்ணுவது பார்(கம்பி) என்றால் ரஜினிகாந்த் படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர்களா? தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் என்ன ஆங்கில பட இயக்குனரா? வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டரா? ஏ ஆர் முருகதாஸ் அவர்களே கரண்டில் இல்லாதவர்கள் கரண்டில்(மின்சாரத்தில்) கூட கைவைக்க சொல்வார்கள் பார்த்து இருங்கள். அடுத்தப் படத்தில் இவ்வளவு சம்பளம் வாங்க முடியுமா? ”

இவ்வாறு டி ராஜேந்தர் பேசினார்.