இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் நாயகன் மாற்றம்

லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த படம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’. சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் தரப்பும், வடிவேலு தரப்பும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடிவேலுக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.