இயக்குநராக அறிமுகமாகும் சசிகுமார் பட இசையமைப்பாளர்
இயக்குநராக அறிமுகமாகும் சசிகுமார் பட இசையமைப்பாளர்க இயக்குநர்வுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து இருந்தார். இந்நிலையில், சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் மற்றும் தீபா ஐயர் இணைந்து தயாரிக்கும் படத்தில் தர்புகா சிவா இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ‘கிடாரி’, ‘பலே வெள்ளைய தேவா’ ஆகிய படங்களுக்கு தர்புகா சிவா இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Happy to announce our #ProductionNo6 #MNMN written and directed by @darbukasiva music on @SonyMusicSouth shoot in brisk progress. Other details coming soon #Kleementertainment pic.twitter.com/lJRsJjc2Fg
— Supertalkies (@supertalkies) May 6, 2019