இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இரட்டை வேடமா ?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான என்.ஜி.கே, காப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளி வந்தன.

இதை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் இந்த சூரரை போற்று திரைப்படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படமும் இயக்குநர் வெற்றி மாறனின் வாடிவாசல் ஆகிய இரண்டு புதிய திரைப்படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த அருவா திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார்.

இவர்கள் இருவரின் கூட்டணியில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன.

இவர்கள் கூட்டணியில் வேல் திரைப்படத்தை போலவே அருவா திரைப்படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாக்க உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக பிறப்பித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.

இந்த ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குகிறார்.

நடிகர் தனுசை வைத்து இவர் இயக்கிய அசுரன் திரைப்படம் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது.

மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதால் இந்த திரைப்படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா தந்தை மகனாக இருவேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படத்தை முடித்து பிறகு இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார்.