இயக்குனர் ஏ எல் விஜய்க்கு 2வது திருமணம் செய்யப் போகும் பெண் இவர் தான்!
தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகனும் இயக்குனருமான விஜய்க்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
தமிழில் மதராசப்பட்டிணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, தேவி ஆகிய படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விஜய். சில வருடங்களுக்கு முன் நடிகை அமலா பாலை திருமணம் செய்து கொண்டார். பின், கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின், படத்தினை இயக்கும் பணிகளில் மிகவும் பிஸியாக இருந்த விஜய், பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கிணங்க, 2 திருமணத்திற்கு சம்மதித்துள்ளாராம்.
விஜய் திருமணம் செய்ய உள்ள பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா. சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யா ஒரு டாக்டர் ஆவார். தற்போது பொதுநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் ஐஸ்வர்யா.
இவர்களது திருமணம் அடுத்த மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடைபெறுகிறது. இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர்
From the desk of Director #Vijay on his Wedding with Dr. R. Aishwarya. @DoneChannel1 pic.twitter.com/RPvKhVQEqk
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) June 29, 2019