Monday, May 25
Shadow

இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு ஜோடி சேரும் குக்கூ’ நாயகி

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘குக்கூ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா நாயர். இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாததால் அவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை இந்நிலையில் தற்போது ‘கண்ணாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் ‘நரகாசுரன்’ பட இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா நாயர். தற்போது இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தை கார்த்திக் ராஜு இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ’திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.