இயக்குனர் சங்க தலைவர் தேர்தலில் அமீர், ஜனநாதன் மனுக்கள் நிராகரிப்பு
நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜி னாமா செய்ததை யடுத்து, தற்போது தலைவர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. இயக்குநர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி அணி மற்றும் அமீர் அணி போட்டியிட்ட நிலையில், அமீர் அணியின் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கான அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதே போல், அமீர் அணியின் சார்பிலே இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தாக்கல் செய்த ✍விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சரியான காரணங்கள் சொல்லாததால் பெரும் பரபரப்பு நிலவியது.