இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின்

மாமன்னர் ராஜராஜன் சோழன் குறித்து அவதூறாக பேசியதாக திருப்பனந்தாள் காவல்துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, பா.ரஞ்சித் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பா.ரஞ்சித் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.