இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இரண்டாவது குழந்தை – திரையுலகினர் வாழ்த்து !
இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி மற்றும் காலா ஆகிய படங்களின் மூலம் முத்திரைப் பதித்தவர் இயக்குனர் பா ரஞ்சித். வெறும் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், களத்திலும் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மிளிரன் என்ற பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.