இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்காக டப்பிங் பேசிய பிக்பாஸ் பிரபலம் !

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா, பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் டப்பிங் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை ரித்விகா, தனது பகுதிக்கான டப்பிங் பணியை இன்று தொடங்கியுள்ளார்

பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.