இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து!

2018ம் ஆண்டு வெளிவந்து பலரது வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய படம் ‘பரியேறும் பெருமாள்’. அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், நடிகர் கதிர், நடிகை ஆனந்தி மற்றும் பலர் நடித்த அந்தப் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார்.
அந்தப் படம் வெளிவந்து நேற்றுடன் ஒரு வருடம் முடிந்தது. அதற்காக இயக்குனர் மாரி செல்வராஜுடன் கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் தனுஷ். உடன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணும் அப்போது இருந்தார். லண்டனில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் நடிகர் தனுஷ்.
அங்கு சென்று அவருக்கு ‘அசுரன்’ பட டப்பிங்கில் மாரி செல்வராஜ் நெல்லைத் தமிழைப் பேச உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கான விவாதமும் நடைபெறுகிறது என்கிறார்கள்.