இரட்டை வேடத்தில் ‘தளபதி 63’ படத்தில் கலக்கும் விஜய்

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கிறார். மேலும் விவேக், கதிர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் கால்பந்த்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என இயக்குநர் யோசித்து கொண்டு இருக்கையில், அதிலும் நானே நடித்து விடுகிறேன் என்று இயக்குநரிடம் விஜய் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அட்லி சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.