இரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா! குழப்பமான ட்விட்டர் பதிவு!

கஜினிகாந்த்’ என்ற படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்ட ஆர்யா-  சயீஷா கடந்த மார்ச் 10 ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஐதராபாத்தில் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 38 வயதாகும் ஆர்யா 21 வயதான சயீஷாவை திருமணம் செய்துக்கொண்டது கோலிவுட் வட்டாரங்கள் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னரும் இருவரும் படு பிஸியாக படங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் ஆர்யா தற்போது “மகாமுனி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில்  நடிகை சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அதில் you + me = என்று  ஒரு குழந்தை ஸ்மைலி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதனால் சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா என்று எண்ணி ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.