‘இராவண கோட்டம்’ படத்தில் இணைந்தார் பிரபல நடிகை

‘இராவண கோட்டம்’ படத்தில் இணைந்தார் பிரபல நடிகை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்திற்கு ‘இராவண கோட்டம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகை ஆனந்தி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து நாயகன் சாந்தனு “‘இராவண கோட்டம்’ படக்குழுவிற்கு உங்களை வரவேற்கிறோம். நடிகை ஆனந்தி கதைகளை தேர்ந்தெடுப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/imKBRshanthnu/status/1125062259774873600?s=19