இளைஞர் ஒருவரை காதலிக்கிறேன் – பிரபல நடிகை

நடிகை அமலாபால் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில், இளைஞர் ஒருவரை காதலிப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் ஒருவருடன் காதல் உறவில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அவர்தான் காரணம். என்னை சுற்றி இருந்தவர்கள் உண்மை பேசியது இல்லை. இந்த நிலையில் எனது மூன்றாவது கண்ணை திறந்து வைத்தவர் அவர்தான்” என கூறியுள்ளார்.