இளையராஜாவிற்கு உதவ புதுச்சேரி அரசு தயார் – முதல்வர் அறிவிப்பு

இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இளையராஜாவின் இசைக்கான திட்டங்களில் ஒன்றான மியூசிக் தெரப்பி மையத்தை புதுச்சேரியில் துவங்க திட்டமிட்டு இருந்தார். மேலும் இதற்கான இடம் வழங்குமாறு புதுச்சேரி அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இசைஞானியின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அதற்கான இடம் வழங்க புதுவை அரசு தயாராக இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.