இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா.? தனுஷுக்கு எதிராக பொங்கி எழும் ரசிகர்கள் போஸ்டர்

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட தனுஷுக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவரது ரசிகர்களே அவருக்கு எதிராக போஸ்டர்கள் அடித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில்…

இவனெல்லாம் ஹீரோவா? இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா? என்று ஆரம்பகாலத்தில் வந்த விமர்சனங்களைத்தாண்டி நின்றவர்கள் நாங்கள். ரசிகர்களை நீக்குவதற்கு சிவாவும், ராஜாவும் யார்?

பல தோல்விகளிலும் என்னை தாங்கிப்பிடித்த தூண்கள் என் ரசிகர்கள். அவர்களை எப்போதும் கைவிடமாட்டேன் என்று சொன்னாயே தலைவா? ஆனால் இன்றைக்கு உழைத்த தலைவர்களை மறந்து விட்டாயே தலைவா?

நாங்களா தனுஷ்க்கு பேனர் கட் அவுட் வைக்க சொன்னோம் என்று பேசிய டச்சப்மேன் ராஜா மீது நடவடிக்கை எடு தலைவா? இல்லையேல் போராட்டம் வெடிக்கும் என்று அந்த போஸ்டரில் அடித்துள்ளனர்.

இதுகுறித்து தனுஷ் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.