இஸ்லாமிய பெண்ணை கரம்பிடிக்கும் சிம்புவின் தம்பி குறளரசன்

இஸ்லாமிய பெண்ணை கரம்பிடிக்கும் சிம்புவின் தம்பி குறளரசன்

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில், அவரது இரண்டாவது மகனான குறளரசன் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். மேலும் சில பாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இஸ்லாத்துக்கு மாறிய குறளரசன் முஸ்லிம் பெண்ணை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அதற்கு பதில் சொல்லும் விதமாக தனது மகனின் திருமண அழைப்பிதழை திரைத்துறை பிரபலங்கள் பலருக்கும் வழங்கி வருகிறார் டி.ராஜேந்தர். குறளரசன், நபீலா அஹமத் என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் வருகின்ற 29ம் தேதி நடைபெறவுள்ளது.