உயிர் காக்கும் முதலுதவி குறித்த விழிப்புணர்வில் இணைந்த பிரபலங்கள்

வாழ்க்கை நெருக்கடியின் காரணமாக அனைத்து துறையை சேர்ந்தவர்களும், அனைத்து நிலையில் இருப்பவர்களும் பலவிதமான மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இப்படி பட்ட மன அழுத்தங்களினால் சில நேரத்தில் திடீர் இருதய நிறுத்தம் ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் எதிர்பாராத மரணம் ஏற்படுகிறது. இவ்வாறு இருதய நிறுத்தம் ஏற்படும் நபர்களுக்கு சி.பி.ஆர் குறித்து தெரிந்திருந்தால் மீண்டும் அவர்களை உயிர் வாழ வைக்க முடியும். இதனையடுத்து சி.பி.ஆர் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக சஞ்சீவன் கமிட்டியினர், உயிர் காக்கும் முதலுதவி என்ற பெயரில் விழிப்புணர்வு படத்தை வெளியிட உள்ளனர். இந்நிலையில், இந்த விழிப்புணர்வு படத்தின் நோக்கத்தைப் பாராட்டிய நடிகர்கள் சத்யராஜ், மற்றும் விஜய்சேதுபதி இருவரும் சி.பி.ஆர் குறித்த இந்த விழிப்புணர்வு படத்தில் தோன்றி விளக்கியுள்ளனர். அதன் காணொளி இணைப்பு👇🏽