உறுதி செய்யப்பட்ட அஜித்தின் அடுத்த பட இயக்குநர் அறிவிப்பு
நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை’. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இவரே தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
அஜித்துக்காக அரசியல் கலந்த திரில்லர் கதையை வினோத் உருவாக்கியதாகவும், ஆனால் அதில் அரசியல் கதையில் விருப்பம் இல்லாத அஜித் வேறு கதையை தயார் செய்யும்படியாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே எச்.வினோத்துக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநருடன் அஜித் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.