உலககோப்பை ஹாக்கி தொடரை திறம்பட நடத்திவரும் ஒடிசா முதல் மந்திரிக்கு டெண்டுல்கர் பாராட்டு

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

இதில் முதலில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 6- 0 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக அளவில் தரமாக செய்துள்ளதற்கு பாராட்டுக்கள். கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் காண பார்வையாளனாக வரவுள்ளேன். எனது ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார்.