உலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்

ஒவ்வொரு நாளும் தங்கள் பயணத்தில் அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, ஏமாற்றப்பட்ட உயிர்களின் வாழ்வில் ஒளியேற்றும் எழுதப்படாத கதையிலிருந்து நீங்காத பல ஹீரோக்கள் உள்ளனர். மகிழ்ச்சியின் ஒளியை பரப்புவது மனிதகுலத்தின் கடமை என்று அவர்கள் உணர்கிறார்கள், அவர்கள் புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல விஷயங்கள் அப்படியே புதைக்கப்பட முடியாது என்பதை காலம் மற்றும் அனுபவங்கள் உணர்த்தியிருக்கிறது. இது தான் அத்தகைய பிரமுகர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் காலம். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவர்களை சந்திக்கும் ஒரு பயணத்தில் இறங்கியிருக்கிறார்.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட அவசர முடிவு அல்ல, மிக நீண்ட காலமாக எனக்குள் மிகவும் ஆழமாக இருந்த ஒரு விஷயம். நமது சினிமா துறையில் இருந்து பலர், இத்தகைய பிரமுகர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது உண்மையே. என் சார்பாக நான் ஏதாவது செய்ய விரும்பினேன், இது என் சார்பில் ஒரு சிறிய முயற்சி” என்றார்.

ஜி.வி.பிரகாஷ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் சிலரை சந்தித்து, உரையாடுகிறார். அவர் சந்திக்கும் பிரமுகர்கள் அவர்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கோ அல்லது பல எல்லையையும் தாண்டி மிகப்பெரிய உதவி மற்றும் பங்களிப்புக்கு செய்பவர்களாக இருப்பார்கள். ஜி.வி.பிரகாஷின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் ஒளிபரப்பாகும் “மகாத்மா மனிதர்கள்” என்ற இந்த நிகழ்ச்சியின் டீசர் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும்.