உலக அளவில் பிரபல லைஃப்ஸ்டைல் பத்திரிக்கையான பிரபல இதழில் முதன்முறையாக தென்னிந்திய நடிகையின் புகைப்படம்

உலக அளவில் பிரபல லைஃப்ஸ்டைல் பத்திரிக்கையான vouge பத்திரிகையின் இந்திய பதிப்பில் அட்டை படத்தில் நடிகை நயன்தாரா இடம் பெற்றுள்ளார். அக்டோபர் மாத பதிப்பில் நடிகை நயன்தாரா புகைப்படம் இடம்பெற்றுள்ளதன் மூலம் இந்த இதழில் அட்டைப்படத்தில் தோன்றிய முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை நயன்தாரா பெற்றுள்ளார்.