உலக பேட்மிண்டன் பைனல்ஸ்

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 21-16, 25-23 என்ற செட்கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

கடந்த ஆண்டும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து தகுதிபெற்றார். ஆனால் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.