Thursday, January 27
Shadow

எச். ராஜா’வுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார் தமிழக முதல்வர்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டுஅரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை மேற்கொள்ளவுள்ளனர். இதில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்பொழுது,

“எச். ராஜா கோபக்காரர் தான். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்” என கூறினார். மேலும், “தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார் தூங்கி கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார்
என கூறியுள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இதுபற்றி பேசிய பழனிசாமி, “தந்தையே ஒன்றும் செய்யாத போது மகன் கார்த்தி சிதம்பரம் என்ன செய்யப்போகிறார்⁉”
என கூறினார்.

CLOSE
CLOSE