எந்திரன்’ திரைப்படத்தின் கதை விவகாரம் – ஷங்கர் நேரில் ஆஜராக உத்தரவு

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 1996 – ம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன்.

அந்த கதையை தனது அனுமதி இல்லாமல் இயக்குநர் ஷங்கர் ‘எந்திரன்’ படமாக எடுத்துள்ளார். எனவே தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.