எனக்குத் தமிழ் சொல்லி கொடுத்தவர் . விமல் பற்றி மனம் நெகிழ்ந்த ஓவியா

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது அதில் களவாணி 2 படத்தின் மூலம் ஓவியாவை நாம் ஒன்பது வருடங்களுக்கு முன்பு நேசித்த அந்த மகேஷாக திரும்பவும் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் உறுதி செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் களவாணி2 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சற்குணம், நடிகைகள் ஓவியா, சரண்யா, நடிகர்கள் இளவரசு, ஆர்.ஜே விக்னேஷ், ரோபோ சங்கர், துரை சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஓவியா பேசியதில் அவருக்குத் தமிழ் சொல்லித் தந்த விமல் பற்றிப் பேசியது தான் ஹை லெவல். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு களவாணி படத்தில் நடிக்கும் போது எனக்கு விமல் தான் தமிழ் சொல்லித் தந்தார் என நெகிழ்ந்தார். மேலும் சரண்யா, சற்குணம், இளவரசு ஆகியோர் ஓவியாவைப் பாராட்டியும், வாழ்த்தியும் பேசியபோது ஒவ்வொருத்தருக்கும் மறக்காமல் நன்றி சொன்னார்