எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் இயக்குநர் மகேந்திரன்

எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற
இயக்குனரான மகேந்திரன் சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மகேந்திரனின் நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் மகேந்திரனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது “இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு சினிமாவை தாண்டிய நட்பு உள்ளது. எனக்குள் இன்னொரு ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும்” என்று நடிகர் ரஜினிகாந்த கூறினார்.