எனக்கு ஒருபோதும் காவிச்சாயம் பூச முடியாது – சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் ! *
உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசியது போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. காவி சாயத்துக்கு திருவள்ளுவர் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன்” என கூறினார். மேலும் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறினார்.