Friday, August 14
Shadow

எனக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க மெகா ஹிட் இயக்குநரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காதா?

என திரைப்பட உலகில் பல பெரிய இயக்குநர்கள் ஏங்கித் தவிக்கும் நேரத்தில்.

அப்படி இருக்கையில் சீரியஸா சொல்றேன்.. எனக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று ஒரு இயக்குனரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னால் எப்படி இருக்கும்.

அந்த இயக்குநருக்கும்.

அப்படி ஒரு வாய்ப்பு அதுவும் ஒரே ஒரு திரைப்படம் இயக்கிய மெகா ஹிட் கொடுத்த அந்த இயக்குநருக்கு கிடைத்துள்ளது.

யார் அவர்?
என்று கேட்கிறீர்களா..

அவர்தான் மெகா ஹிட் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிதான்

அவர் இயக்கிய திரைப்படத்தின் பெயர்…

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

மலையாள நடிகர் துல்கர் சல்மான், ரித் வர்மா, விஜய் டிவி ரக்சன்
கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படத்தை இயக்கியவர் தான் இந்த மெகா ஹிட் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.

Viacom 18 என்ற திரைப்பட நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க மசாலா கஃபே ஹர்ஷவர்தன் மற்றும் ரமேஷ்வர் இசையமைத்திருந்தனர்.

இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த போதிலும் கிட்டதட்ட 4 வருடங்களாக இந்த திரைப்படம் வெளி வருவதில் தள்ளிக் கொண்டே போனது.

இறுதியாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியானது.

முதலில் ஓபனிங் கூட இல்லாத இந்த திரைப்படத்திற்கு பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையால் பெரும் வரவேற்பு கிடைத்தது.

பின்னர் எவரும் எதிர்பாராத வகையில் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த திரைப்படத்தின் நிறைய காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பது நிச்சயம் பலருக்கு புரிந்திருக்கும். அதற்கு காரணம் தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர
ரசிகர் என்பதுதான்.

அப்படியிருந்த அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து போன் கால் வந்தால் எப்படியிருக்கும்..?

இன்று ஜீலை 29ஆம் தேதி இந்த திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் தேசிங் பெரியசாமியை அழைத்து பாராட்டியுள்ளார்.

படம் சூப்பர்.. எக்சலண்ட்.. ரொம்ப சூப்பர்.. நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு… சாரி.. இப்ப தான் படத்தை பார்க்க டைம் கிடைச்சது.

எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க.. சீரியசா சொல்றேன்.. திங்க் பண்ணுங்க.. என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட இயக்குநர் தேசிங் பெரியசாமி பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

அவரின் ட்விட்டரில்… இன்று முழுவதும் இந்த வார்த்தைகளே ஓடிக்கொண்டிருக்கிறது என பரவசத்துடன் பகிர்ந்துள்ளார்.

 

Read Also  சமூக ஊடகங்களின் போக்கு பற்றி ஒளிப்பதிவாளர் இயக்குனர் தங்கர்பச்சான் கவலை!