எனது ரசிகர்கள் அனைவரும் ஒன்று கூடிடுவாங்க. பிரச்சனை வரும் நான் ஆஜராக விலக்கு அளிக்க ரஜினிகாந்த் மனு
2018ல் தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் நடத்தியா துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அந்த சம்பவத்தின்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது வன்முறைக்கு சில சமூக விரோதிகளே காரணம். போலீசை மட்டும் குறை கூறுவது தவறு எனவும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
இது அப்போது முதல் இன்று வரை பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
போராளிகளை சமூக விரோதிகளை என ரஜினிகாந்த் கூறிவிட்டார் என அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 25-ந் தேதி சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில் 25-ந்தேதி நேரில் ஆஜராவதில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விலக்கு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.
என் ரசிகர்கள் அதிகளவில் கூடினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.