”என்னடா பண்ணி வச்சிருக்கீங்க,..”; படத்தில அதிர்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்!

தமிழ் திரைப்பட நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. நம்பர் ஒன் நாயகியாக இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது படங்களின் வருகை என்றாலே ஒரு அதீத எதிர்பார்ப்பு நிலவும். அப்படியாக இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கொலையுதிர் காலம்’. எந்த நேரத்தில் இப்படத்தின் வேலைகளை ஆரம்பித்தார்களோ தெரியவில்லை, ஆரம்பம் முதலே இப்படத்திற்கு பல பிரச்சனைகளை தாங்கிக் கொண்டே வந்தது.

தொடர்ந்து பல வெளியீட்டு தேதிகள் அறிவித்த பிறகு அந்த தேதிகளில் வெளிவராமல், ரசிகர்களை சோதனைக்குள்ளாக்கியது.

அட போங்கடா… என்று மூச்சு விட்ட நேரத்தில் 8-வது முறையாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. 9 ஆம் தேதி வெளிவரும் என்று…

ஆனால், 9 ஆம் தேதி வெளிவராததால் மிகவும் விரக்தி அடைந்தனர். ஒருவழியாக நேற்று (9ஆம் தேதி) மாலை நேரத்தில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, படம் வெளியிடப்பட்டது.

இரவுக் காட்சிக்கு ரசிகர்கள் குவிந்தனர். படத்தின் நீளம் 108 நிமிடங்கள் தான். இதில் நயன்தாராவிற்கு வாய் பேச முடியாத, காது கேளாத ஒரு கேரக்டர்…படத்தின் ஆரம்பம் முதலே கதை எதை நோக்கி செல்கிறது என்று புரியாமல் சென்று கொண்டிருக்க, எரிச்சலடைந்த ரசிகர்கள் பலர் முதல் பாதியிலே திரையரங்கை விட்டு வெளியேறினர்.

பாதி ரசிகர்கள் சென்றுவிட்ட பிறகு, இரண்டாம் பாதியிலும் அதே சோதனை தொடர, வெளியே வந்த ரசிகர்கள் ‘என்னடா இது என் தலைவிக்கு(நயன்தாரா) வந்த சோதனை என்று தலையில் அடித்துக் கொண்டே சென்றனர்.

ஓர் இரவில் நடக்கும் கதை , மிகவும் பழைய கதை, எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாமல் சென்றதால் ரசிகர்களை சோதனைக்குள்ளும் சோதனை செய்து விட்டது.

அதிலும் ஒரு ரசிகர் .. ‘இதுக்கு இந்த படம் வெளியில வராமலே இருந்திருக்கலாம்’ என்று சொல்லிக் கொண்டு செல்ல, அந்த கமெண்டும் நம் காதில் விழுந்துவிட்டது.