என்னுடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் தயாரிப்பாளருக்கு லாபம் தான்: சிவகார்த்திகேயன்
பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் என்னுடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் தயாரிப்பாளருக்கு லாபம் தான் என கூறினார்.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ரசிகர்கள் கொடுக்கும் நம்பிக்கை தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஜெயிக்கும் போது ஒரு அணியாக நிற்பது போல் தெரியும். தோற்கும் போது தான் தனியா நிற்கிறோம் என்பது புரியும்.
ஆனா தோற்கிறதோ தனியா நிற்கிறதோ பிரச்சனையல்ல. நிற்கிறோம்கிறது தான் பிரச்சனை. நான் நிற்கிறேன். கடைசி படம் சரியாக போல. ஆனா அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. இதெல்லாம் ஒரு விளையாட்டு தான். ஒரு மேட்சுல அவுட்டாயிட்டோம் தோத்துட்டோம் அப்படினா அந்த மேட்ச் தான் முடியும், லைஃப் முடியாது.
இனி நான் நடிக்கும் படங்கள் என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாகத்தான் இருக்கும். நான் கடைசியா பண்ண படம் என்னுடைய தயாரிப்பாளருக்கு லாபகரமான படம் தான். அது பற்றி பேச வேண்டாம். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா என்றார்.