என்னைப் பற்றியோ எனது மன்றத்தை பற்றியோ எங்கேயும் நீங்கள் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
தர்பார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் பட வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெரும் சர்ச்சையை கிளப்பியதாக இருந்தது.
அதிலும், அவர் பேசிய அரசியல் பேச்சுகள் எதிர் தரப்பினரை நேரடியாகவே தாக்கியது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கே பெரும் முக சுழிவை ஏற்படுத்தியது.
இதனால், கடுப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸை நேரில் அழைத்து என்னைப் பற்றியோ அல்லது எனது மன்றத்தை பற்றியோ இனி ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசக் கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் முக சோர்வுற்று அங்கிருந்து சென்றுவிட்டாராம் ராகவா லாரன்ஸ்.
யாரையும் எப்போதும் தரம் தாழ்ந்து பேசுவதை அனுமதிக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.