என்னையும் நடிக்க வைத்து என்ன அயோக்கியத்தனம் ரா.பார்த்திபன்

நடிகர் விஷால் நடித்த ‘அயோக்யா’ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பார்த்திபன், ‘அயோக்யா’ திரைப்படம் தன்னுடைய ‘உள்ளே வெளியே’ படத்தின் காப்பி என்றும், இதுவொரு அயோக்கியத்தனம் என்றும் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்துள்ள டீவீட்டில் ” ‘அயோக்கியா’த்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original ‘உள்ளே வெளியே’படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு’அ-தனம்’ குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதன் இணைப்பு👇🏼