என்னை எப்படி பாக்கனுமுன்னு நீயே முடிவு பண்ணு.. தர்பாரில் ரஜினிகாந்த் பன்ச்!

என்னை எப்படி பாக்கனுமுன்னு நீயே முடிவு பண்ணு.. தர்பாரில் ரஜினிகாந்த் பன்ச்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 167 படத்திற்கு தர்பார் என தலைப்பிட்டு  இன்று அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

தர்பார் என்றால் அது அரசரின் சபை என பொருள்படும். அதாவது அரசர் சபை என்றும் கூறலாம்.

அங்கு அரசரை சந்திக்க மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூடுவர்.

இந்த தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியாக  நடிக்கிறார் என்பதை போஸ்டரில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

மேலும் மும்பை என்ற வார்த்தை (எழுத்துக்கள்) அதில் தலை கீழாக உள்ளது. எனவே மும்பையை புரட்டிப்போடும் ஒரு கொலை சம்பவம் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டு இருக்கலாம்.

அதை துப்பறிய நாய் மற்றும் அதிகாரிகளுடன் ரஜினி ஈடுபடலாம் எனத் தெரிகிறது.

முக்கியமாக “You decide whether you want me to be good bad or worse” என்ற வாசகம் அதில் உள்ளது.

அதாவது நான் நல்லவனா கெட்டவனா இல்ல மோசமானவனா… எப்படி இருக்கமுன்னு நீயே முடிவு பண்ணிக்கோ என்ற அர்த்தம் அதில் உள்ளது.

எனவே இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களத்தில் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த தர்பார் பட சூட்டிங் நாளை முதல் மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

லைகா தயாரிக்கும் இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு 2020 பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

You decide whether you want me to be good bad or worse Rajini punch in Darbar