என்னை விட மிக பிரமாதமாக நடிக்கிறீர்கள் – பிரபல நடிகர் வாழ்த்து

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த படம் ‘காஞ்சனா 3’. இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டு, என்னை விட மிகவும் பிரமாதமாக நடிக்கிறீர்கள். வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் ‘காஞ்சனா 3’ படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் போல கேட் அப் போட்டு டப்ஸ்மாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.