என் உயிருக்கு ஆபத்து ‘அசுரன்’ பட நாயகி காவல் ஆணையர் புகார்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் ஆவார். இந்நிலையில், திருவனந்தபுரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் சமூகவலைதளங்களில் தன்னுடைய புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், அவரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும். அவரது நடத்தை தனக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் கையெழுத்திட்ட காசோலைகளை வைத்துக் கொண்டு மோசடி செய்து ஸ்ரீகுமார் தன்னை ஏமாற்றியதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.