என் குடும்பத்தாரை விட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் ராஜேஷ் ம செல்வா பெருமிதம்
“ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். தூங்காவனம் படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார். அதிகநேரம் சூட்டிங் நடந்தால் கமல்சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம் தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப்படம் கமல் சார் எனக்காகவே தயாரித்தார். இந்தப்படத்தில் வேறு இசை அமைப்பாளரைப் போட்டிருந்தாலும் ஜிப்ரான் வந்து எனக்கி உதவி செய்திருப்பார். அக்ஷரா ஹாசன் அபி நடிக்க இருந்ததால் ஒரு பக்கா வொர்க்ஷாப் வைக்கலாம் என்று நினைத்தோம். அது சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்தரன் சார் ராஜ்கமல் பிலிமஸோட படம் பண்றோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவார். சியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக்கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டி கூட விட்டிருக்கிறார். ஏன் இந்தப்படத்தில் அக்ஷரா நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்” என்றார்