Movie Wingz
திரை விமர்சனம்

என்.ஜி.கே – திரை விமர்சனம்.

 நடிப்பு – சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர்
தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் – செல்வராகவன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி – 31 மே 2019
ரேட்டிங் – 2/5
 
இந்தியா நாட்டின் தேர்தல் முடிவுகள் வந்து புதிய ஆட்சி பதவியேற்று இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. மக்கள் அனைவருமே கடந்த சில மாதங்களாகவே அரசியல் பரபரப்பில் தான்  இருந்து வருகிறார்கள்.
 
மக்களின் அந்த அரசியல் பரபரப்பை ஒரு பரபரப்பான அரசியல் படத்தைக் கொடுத்து மெஜாரிட்டியைப் பெறுவதை விட்டுவிட்டு இப்படி டெபாசிட் கூட கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலைக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
 
அரசியல் படம் எடுப்பது என்பது சர்வ சாதாரண விஷயமல்ல. நமது நாட்டின் மக்கள் மனதில், இன்றைய இளைய தலைமுறை ரசிகர்கள் மத்தியிலும் 25 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த இயக்குனர் மணிவண்ணனின் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை படம் போல் சம்மட்டியால் அடித்தது போல் மக்கள் மனதில் பதிவது போல்    பதிந்திருக்கிறது. அந்த அமைதிப்படை  படத்தை மிஞ்சும் அளவிற்கு இந்த 25 ஆண்டுகளில் எந்த ஒரு படம்மும் வரவில்லை, எந்த ஒரு இயக்குனரால் கூட அதைச் செய்ய முடியவில்லை என்பது தமிழ் சினிமாவில் நல்ல அரசியல் கதை வராதது மிகவும் வருத்தமான விஷயம்தான்.
 
கொஞ்சம் புதுப்பேட்டை
கொஞ்சம் எல்கேஜி, கொஞ்சம் நோட்டா, கொஞ்சம் நிகழ்கால அரசியல் காமெடி ஆகியவை இணைந்த ஒரு கலவைதான் இந்த என்ஜிகே. இறங்கி விளையாட வேண்டிய ஒரு கதையில் எட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். 
 
அரசியலில் இறங்குவது போலத்தான் அரசியல் படமும். படத்தில் எம்டெக் முடித்த கதாநாயகன் சூரியாவை டாய்லெட் கழுவ வைப்பவர், அரசியல் ஒரு சாக்கடை அவரது தாயார் சொல்வது  படத்தின் திரைக்கதையில் தூரத்தில் இருந்தே சுத்தம் செய்ய நினைத்தால் எப்படி, உள்ளே இறங்கி சாக்கடை அடைப்பை எடுக்க வேண்டாமா…. 
இது ஒரு அரசியல் படமா ?, இது ஒரு ஆக்ஷன் படமா ?
இல்லை இது காதல் படமா ?, சென்டிமென்ட் படமா ?, இல்லை காமெடி படமா 
என இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ஏதோ ஒரு திரைபடமாக வெளிவந்திருக்கிறது. சூர்யா நடித்த என்.ஜி.கே
‘(நந்த கோபால குமரன்).
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த திருமணமான இளைஞர் கதாநாயகன் சூர்யா, எம்டெக் படித்து முடித்து, பெரிய கம்பெனி வேலை வேண்டமென்று சொல்லி மனதிற்குப் பிடித்த ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறார்.
 
கதாநாயகன் சூரியா ஊர் பொதுமக்களுக்கு அடிக்கடி சமூக சேவை செய்து நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறார். அவரது மனதில் ஒரு சந்தர்ப்பத்தில் அரசியல் ஆசையை தூண்டிவிடுகிறார், 
அப்பகுதியில் உள்ள சில வியாபாரிகள், கந்து வட்டி நபர்களின் பகையை வாங்கி கொள்கிறார். இந்த மோதலில் இருந்து தப்பிக்க அப்பகுதி எம் எல் ஏ’வின் உதவியை நாடுகிறார். அந்த எம் எல் ஏ-வும் சூர்யாவிற்கு உதவி புரிய, பதிலுக்கு சூர்யாவை தனது கட்சியில் சேர்ந்துவிடுமாறு வற்புறுத்துகிறார் அந்த எம் எல் ஏ.
 
அரசியல் கட்சித் தொண்டரான பாலாசிங். அவரது ஊர் எம்எல்ஏவான இளவரசு எதிர்க்கட்சியைச் சேர்ந்த இளவரசுவிடம் அடிமட்டத் தொண்டனாக சேர்கிறார்.நமது கதாநாயகன் சூர்யா எதிர்க்கட்சித் தலைவரான பொன்வண்ணனுக்கு எல்லா பிளான்களையும் போட்டுத் தரும் கார்ப்பரேட் அட்வைசரகா  ரகுல் ப்ரீத் சிங் அறிமுகம் கிடைத்து, அப்படியே மேலே வருகிறார்.கதாநாயன் ஆளும் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த ரகுல் ப்ரீத் சிங்க்கு ஒரு உதவி செய்கிறார். அப்படியே முதல்வரிடமும் நேரடியாக டிலிங் பேசுகிறார். சூர்யாவின் வளர்ச்சியைப் பிடிக்காத முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் பொன்வண்ணன் கதாநாயகன் சூர்யாவை அழிக்க நினைக்கிறார்கள், பின்னர் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
 
தன் நரம்பில் துடிக்கும் முதுகெலும்பாக தன் நடிப்பால் படத்தை முடிந்த அளவு தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார் நாயகன் சூர்யா. ஆர்கானிக் விவசாயம், காதல் கணவன், அன்பான மகன், உயிர்த் தோழன், அடிமட்டத் தொண்டன், கார்ப்பரேட் நாயகியின் (கள்ளக்) காதலன், போராளி என படம் முழுவதும் காட்சிக்குக் காட்சி மாறிக் நடித்து கொண்டேயிருக்கிறார். அவர் எப்போது என்ன செய்கிறார் என்பது அவருக்கும் புரியவில்லை, படம் பார்க்கும் நமக்கும் புரியவில்லை. ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் என்னென்னமோ செய்கிறார். துப்பாக்கியால் சுடுகிறார்கள், கத்தியால் குத்துகிறார்கள், ரவுண்ட் கட்டி சண்டை போடுகிறார்  எல்லாவற்றையும் மீறி மேடையில் பேசி முழங்குகிறார். சூர்யாவின் நடிப்பை  வீணடித்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
 
இரண்டு நாயகிகள் என்றாலே நடிப்பில் போட்டி இருக்கும் என்பார்கள். இங்கு சூர்யாவுக்கு போட்டி போடுகிறார்கள். அதிலும் மனைவி சாய் பல்லவி சைக்கோ மாதிரி நடித்திருக்கிறார் நேரடியாகவே சூர்யாவிடம் 
ரகுல் ப்ரீத் சிங்கை வைத்திருக்கிறாய் என்று
குத்திக் காட்டுகிறார். ஆனாலும், அடுத்த காட்சியில் ரகுல் ப்ரீத்துடன் கதாநாயகன் சூர்யா டின்னர் சாப்பிடுகிறார். சாய் பல்லவி கணவன் சூர்யாவின் அரசியல் நுழைவுக்கு ஏதோ உதவி செய்யப் போகிறார் என்று பார்த்தால் அவளை வைத்திருக்கிறாயா வைப்பாட்டி சண்டை போட்டு தன் கடமை முடிந்ததென ஒதுங்கிப் போகிறார். சில ஆட்சிகளை கவிழ்த்தவர், சில ஆட்சிகளை உருவாக்கியவர் என ரகுல் பிரித் கதாபாத்திரமான கார்ப்பரேட் பிஆர் தொழிலுக்கு பில்ட்அப் கொடுக்கிறார்கள். அவர் அரசியல்வாதிகளுக்கு உதவுவதை விட சூர்யா மீது காதல் கொண்டு அவருக்கு உதவுகிறார்.
 
பொன்வண்ணன் எதிர்க்கட்சித் தலைவர், தேவராஜ் மாநில முதல்வர். இளவரசு, சூர்யா தொகுதியின் எம்எல்ஏ. சூர்யாவின் அப்பாவாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஆக நிழல்கள் ரவி. அம்மாவாக உமா பத்மாநாபன். சூர்யாவுக்காக உயிர் கொடுத்த நண்பனாக ராஜ்குமார். இப்படி பல கேரக்டர்கள் இருந்தாலும் ஒருவர் கதாபாத்திரமும் முழுமையாக இல்லாமல் தவிக்கிறது.
 
யுவன்ஷங்கர் ராஜாவும் படம் பார்த்து ஏதாவது பீல் வந்தால்தானே பின்னணி இசையைக் கொடுக்க முடியும். அவர் பங்குக்கு அன்பே பேரன்பே.. என ஒரு மெலடியில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் எனக் காட்டும் செட் தெருக்களில் அப்படி ஒரு நாடகத்தனம்.
 
முதல்வருடன் மிரட்டும் தொனியில் வீடியோ கான்பரசிங்கில் கதாநாயகன் சூர்யா உரையாடும் ஒரு காட்சி, சூர்யா கேட்டார் என்பதற்காக அவரின் அப்பா ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிழல்கள் ரவி, ஒரு மந்திரியின் இல்லீகல் உறவு பற்றி விசாரிப்பது அபத்தமான பல காட்சிகளுக்கு சிறு உதாரணம்.
 
படத்தின் ஆரம்பக் காட்சியில் கதாநாயகன் சூர்யா கொட்டும் மழையில் இரவு நேரத்தில் நிலத்தில் விவசாய வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்து அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு, அம்மா எதிரிலேயே மனைவி சாய் பல்லவியுடன் குல்பி ஐஸ்க்ரீமை பங்கு போட்டு சாப்பிட்டு படுத்துறங்கும் அந்த முதல் காட்சியைப் பார்த்ததும் நாமும் உருகி, அடடா…செல்வராகவன் என்னமோ பெரிதாகச் சொல்லப் போகிறார் என நிமிர்ந்து உட்கார்ந்தால், அதன் பின்…. பல காட்சிகளையும் பார்த்து படம் முடிந்து வெளியே வந்தபின் அந்த முதல் காட்சியை மட்டுமே மீண்டும் நினைப்பது மட்டும்தான்
செல்வராகவன் டச். மற்ற எல்லாம் ப்ச்.
 
என்ஜிகே –  ஓகே ? என்று சொல்ல கூட மனம் வர வில்லை ஒரு முறை  பார்க்கலாம்

Related posts

சென்னை பழனி மார்ஸ் – திரை விமர்சனம்

MOVIE WINGZ

Kayamkulam Kochunni

MOVIE WINGZ

தர்மபிரபு – திரை விமர்சனம்

MOVIE WINGZ