என்.ஜி.கே’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

‘செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் “என்ஜிகே’. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 31ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது இதற்கிடையே நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு ட்விட்டர் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளளது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான உரிமையை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் கைப்பற்றியிருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

error: Content is protected !!