எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் அஜித்குமார் நடிக்கிறார் ?
எம்.ஜி.ஆரின் அன்பே வா படம் ரீமேக்கில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது
எம்.ஜி.ஆரின் அன்பே வா ரீமேக்கில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
அஜித்குமார் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் மகளை காப்பாற்ற போராடும் பாசமான தந்தையாக வந்தார். இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் அமிதாப்பசன், டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் ‘ரீமேக்’ ஆகும்.
இதில் பாதிப்புக்கு உள்ளான சில இளம் பெண்களுக்காக கோர்ட்டில் வாதாடி நியாயம் கிடைக்க செய்யும் வக்கீலாக நடிக்கிறார். எச்.வினோத் இயக்குகிறார். படவேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் அன்பே வா படத்தில் அஜித்குமார்-நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்பே வா 1966-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம். இதில் எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி ஜோடியாக நடித்து இருந்தனர். நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான், அன்பே வா, புதிய வானம், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், லவ்பேர்ட்ஸ் உள்ளிட்ட இனிமையான பாடல்கள் படத்தில் உள்ளன.
அன்பே வா ரீமேக்கில் அஜித்குமார் நடிக்க உள்ளதாக இணையதளத்தில் வெளியான தகவலை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். ஆனாலும் அஜித் தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை. வதந்தி என்றே கூறப்படுகிறது.