எல்கேஜி விமர்சனம்

சாதாரண ஒருவர் எப்படி மாநிலத்தின் முதல்வராகிறார் எனும் கருவோடு வந்திருக்கும் படமே எல்.கே.ஜி.

லால்குடி கருப்பையா காந்தி என்ற எல்கேஜி (ஆர்ஜே பாலாஜி) மாநிலத்தில் முதல்வராகிறார். இது தான் படத்தின் தொடக்கம். அவர் எப்படி முதல்வராகிறார்? எனும் கருவை மையப்படுத்தி வந்திருக்கும் நக்கல் நய்யாண்டி கலந்த காமெடி படம் தான் எல்கேஜி.

லால்குடி தான் கருப்பையாவின் சொந்த ஊர். இந்த ஊரில் முதலில் கவுன்சிலராக வருகிறார். அதன் பிறகு முதல்வருக்கு போட்டியிடுகிறார். தனிமனிதனின் தனிப்பட்ட கருத்து, சமூக்கத்தின் மீதான வெறுப்பு ஆகியவை தான் தனிமனிதனை அரசியலை நோக்கி பயணிக்க வைக்கிறது. அப்படிஅ அரசியலுக்கு வருபவர் தான் கருப்பையா காந்தி. மக்களுக்காக அவர் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. தனக்கு தானே அரசியல்வாதியாக வரவேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்.

படம் தொடக்கம் முதல் எப்படி கவுன்சிலராகிறார் என்பதை சித்தரிக்கிறது. அதன் பிறகு எப்படி முதல்வராகிறார் என்பதை சித்தரிக்கிறது. இந்த இரண்டிற்கும் இடையில், என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதிக் கதை.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைவராக வரும் ப்ரியா ஆனந்த், கருப்பையா காந்திக்கு அரசியலில் என்ன செய்தால் எப்படி ஜெயிக்கலாம் என்ற ஆலோசனை, அறிவுரை வழங்குகிறார். சமூக வலைதளம், டிவி, மீடியா ஆகியவற்றின் யுக்தியை ஆர்.ஜே.பாலாஜி தெரிந்து கொண்டு கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

இதனை அறிந்து கொள்ளும் துணை முதல்வர் போஜப்பன் (ராம்குமார்), முதல்வராக திட்டமிட்டமிடுகிறார். இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் யுக்திகளை தனக்கு சாதமாக்கிக் கொள்ள முயற்சித்து, மறைந்த முதல்வர் தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் ஆர்.ஜே.பாலாஜியை களமிறக்குகிறார். ஆனால், அதே தொகுதியில் ராமராஜ் பாண்டியன் (ஜேகே ரித்தேஷ்) களமிறங்குகிறார்.

இந்த தேர்தலில் ஜெயிக்க ஆர்.ஜே.பாலாஜி என்ன செய்கிறார். இறுதியில் ராமராஜ் பாண்டியனை தோற்கடித்து தேர்தலில் ஜெயிச்சாரா இல்லையா என்பது தான் எல்கேஜி படம்.

இயக்குனர் கே ஆர் பிரபு தன்னுடைய அரசியல் வலியை எல்கேஜி படத்தின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு சரியான ஹீரோவையும் தேர்வு செய்துள்ளார். ஹீரோவுக்கு சரியான ஜோடி தான் ப்ரியா ஆனந்த். எல்லாமே சரியாக இருக்கும் போது படத்திற்கு கிடைக்கிற வரவேற்பும் செம்மயா இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.