எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வீட்டுக்கு பாஜகவினர் அனுப்பிய பார்சல்

சமீபத்தில் ‘காப்பாத்துங்க நாளை சினிமாவை’ என்ற குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் “பணத்திற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. பணம் அதிகமாகவே விளையாடியிருக்கிறது. அதனால், இந்த முறையும் நாம் தவறு செய்திருப்போம். கண்டிப்பாக காவி வேட்டி கட்டிக்கிட்டு அலையப் போகிறோம்” என கூறியிருந்தார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டு முகவரிக்கு பாஜகவினர் ஒரு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில், காவி வேட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த பார்சலில் இருந்த கடிதத்தில் “இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம்” என கூறப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.