‘எஸ்.கே.14’ படக்குழுவில் மீண்டும் இணைந்தார் சிவகார்த்திகேயன்*

‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தில் பரபரப்பாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது ‘எஸ்.கே.14′ படக்குழுவினருடன் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நேற்று துவங்கியுள்ளது. மேலும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.’ என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிக்கிறார்.