‘ஏ 1’ சர்ச்சைக்கு சந்தானம் விளக்கம்
இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் ‘ஏ 1’. இந்த படத்தில் நாயகியாக தாரா அலிஷா நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசரில் உள்ள சில வசனங்களை நீக்க வலியுறுத்தி பிராமணர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு சந்தானம் கூறுகையில் “ஒரு லோக்கல் பையன், பிராமண பெண் இந்த முரண்பாடுகள் இருந்தால் தான் நகைச்சுவை உருவாகும். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக எப்போதும் வசனம் வைப்பதில்லை” என்று கூறியுள்ளார்.