ஏ 1 – திரை விமர்சனம்
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக களம் இறங்கிய சந்தானம் ஆரம்பத்தில் அவருக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத சில கதைகளில், சில கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாக தோல்வியை தழுவினார். அதன் பின்புதான் யோசித்து, தன்னிடம் மக்கள் நகைச்சுவை கலந்த படங்களையே எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அப்படிப்பட்ட கதைகளைத் தேர்வு செய்து கதாநாயகனாகவும் வெற்றி பெற்றார்.
அந்த வரிசையில் இதற்கு முன்பு அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களை விட இந்த ஏ 1 திரைபடத்தில்தான் பல மடங்கு சிரிக்க வைத்திருக்கிறார். சந்தானம் தனக்கு மட்டும் படம் முழுவதும் முக்கியத்துவம் கொடுத்துவிடாமல் உடன் நடிப்பவர்களும் அவர்களது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த வைத்த மொத்தமாக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
நகைச்சுவை படத்தை இயக்குவது மற்ற படங்களை இயக்குவதை விட கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அறிமுக இயக்குனர் ஜான்சன் அவரது முதல் படத்திலேயே நகைச்சுவையை மிகவும் எளிதாக இயக்கியிருக்கிறார்.
பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் கதாநாயகி தாரா அலிசா பெரி. அவருடைய அப்பா அரசாங்கத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். மிகவும் நேர்மையான அரசு அதிகாரி எனப் பெயரெடுத்தவர். கதாநாயகி தாராவுற்கு அவருடைய பிராமண குடும்பத்தைச் சேர்ந்த
ஆப்பாயில் சாப்பிட்டு காதலை நிரூபிக்கும் பிராமணப் பெண்” என்று டீசரில் இடம் பெற்ற காட்சிக்கும் எந்த சர்ச்சையும் இல்லாமல் சரியான முடிவைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஜான்சன் இதே ரூட்டில் சந்தானம் தொடர்ந்ததால் கதாநாயகனாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக காலம் தாக்குப் பிடிக்கலாம்.
தனக்கு ஜோடியாக படத்திற்குப் படம் புது நாயகிகளைத்தான் நடிக்க வைக்கிறார் சந்தானம். தாரா அலிசா பெரி இப்படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். சந்தானத்தைக் காதலிப்பதும், அப்பாவைக் கண்டு பயப்படுவதும் மட்டும்தான் படத்தில் அவரது வேலை.
சந்தானம் நண்பர்களாக நடித்துள்ள மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி ஆகிய மூன்று பேரும் சந்தானத்திற்கு ஈடு கொடுத்து காமெடியில் இப்படத்தில் கலக்கி உள்ளார்கள். சந்தானத்தின் அப்பாவாக எம்எஸ் பாஸ்கர் வழக்கம் போல இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார். தாராவின் அப்பாவாக கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வீல் சேரில் அமர்ந்து கோமாவில் இருப்பவராக நடித்த அந்த தாடிக்காரராக நடித்த யாட்டின் கார்யேகர். கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ளார் இன்ஸ்பெக்டராகக வலம் வரும் சாய்குமார் பெரியதாக எதோ செய்யப் போகிறார் என்று நினைத்தால் ஒன்றும் செய்யாமல் போகிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் மாலை நேர மல்லிப்பூ…., சிட்டுக்கு சிட்டுக்கு… பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைத்திருக்கிறார் .
படத்தின் இடைவேளை வரை கலகலப்பான பல காட்சிகளுடன் படம் நகர்ந்து செல்கிறது. அதன்பின் சந்தானத்தின் நண்பர்கள் மாறன் தங்கதுரை, கிங்ஸ்லி ஆகியோர்கள் மூன்று பேரும் சேர்ந்து கதாநாயகியின் தந்தையை கொலை செய்கிறார்கள் கொலை செய்யப்பட்ட யாட்டின் கார்யேகர் வீட்டில் இறுதிச் சடங்குக்காக வீட்டில் இறுதி அஞ்சலிக்கு செய்து கொண்டிருக்கும் போது நடைபெறும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் வரை செல்கிறது. தாங்கள் கொலை செய்ததில் இருந்து தப்பிக்க சந்தானம் மற்றும் அவர் நண்பர்கள் மாறன் தங்கதுரை, கிங்ஸ்லி என்ன கலாட்டா செய்கிறார்கள் என்பதுதான் பிறகு மொத்த காட்சிகளும். ஒரு பக்கம் சடலத்தை வைத்துக் கொண்டு மறுபக்கம் சிரிக்கவும் வைக்கிறார்கள். சரி, படம் இன்னும் கொஞ்சம் போகும் என்று பார்த்தால் திடீரென படத்தை முடித்துவிட்டார்கள். காமெடி படம் என்பதால் பல காட்சிகளில் லாஜிக் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பிராமண சமூகத்தை பற்றி மறைமுகமாக சில கிண்டலான காட்சிகளை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து உத்தமனாக காட்டிய கதாநாயகியின் அப்பாவை, அப்படிப்பட்ட மனிதராக காண்பித்து இருக்க வேண்டியதில்லை.
சமீப காலங்களில் நம்மை அதிகமாக சிரிக்க வைத்த படங்கள் எதுவும் வரவில்லை. அந்தக் குறையை இந்தப் ஏ 1 படம் போக்கியிருக்கிறது.